‘நீ ஓட்டு போட வேண்டாம், பொட்டியில் வைத்து பூட்டு வைத்து கொள்’…. குறைகளை கூறிய பெண்ணிடம் அமைச்சர் அலட்சிய பதில்…!!

Author: Babu Lakshmanan
26 January 2024, 5:03 pm

கிராம சபை கூட்டத்தில் குறைகளை கூறிய பெண்ணிடம் நீ ஓட்டு போட வேண்டாம் பொட்டியில் வைத்து பூட்டு வைத்து கொள் என பொருப்பில்லாமல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், நன்மங்கலம் முதல் நிலை ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்ரமணியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிராம சபை கூட்டத்தில் பெண்கள், ஆண்கள் என அனைவரும் கலந்து கொண்டு நன்மங்கலம் ஊராட்சியில் உள்ள பிரச்சனைகளை கூறி வந்தனர். பெண் ஒருவர் வடிகால்வசதி இல்லை, அதனை ஏற்படுத்தி தர வேண்டும், எங்களை பிரச்சனைகள் குறித்து ஊர் தலைவரோ, வார்டு உறுப்பினரோ வந்து கூட எட்டிப்பார்க்கவில்லை, ஓட்டு மட்டும் கேட்க வந்தார்கள் என அமைச்சரிடம் கேட்டார்.

அதற்கு அமைச்சர் ‘நீ ஓட்டெல்லாம் போட வேண்டாம், பொட்டியில் வைத்து பூட்டு போட்டு கொள்ளுங்கள்,’ என பதிலளித்தது சர்ச்சையாகி உள்ளது.

வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை, அதனை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லாத போது, அமைச்சர் ஒருவர் பொருப்பில்லாமல் பெண் ஒருவரிடம் ஓட்டு போட வேண்டாம் என கூறுவது கேள்வி கேட்போரை மிரட்டுவது போல் உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

  • meiyazhagan Movie OTT audience VS Theater audience மெய்யழகன்: ஓடிடி vs தியேட்டர் Audience Problem?
  • Views: - 366

    0

    0