அம்மா மினி கிளினிக் திட்டம் அவ்வளவுதான்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல் ; அப்செட்டில் அதிமுக!!
Author: Babu Lakshmanan11 November 2023, 3:59 pm
அம்மா மினி கிளினிக் திட்டத்தை இனி தொடர முடியாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அம்மா மினி கிளினிக் திட்டம் மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மையம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது :- அம்மா மினி கிளினிக் என்பது ஓராண்டுக்கான திட்டமாக கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் முடிந்து விட்டது. அதை மீண்டும் தொடரவும் முடியாது. அதேபோல, 5 ஆண்டுக்கான திட்டமான நகர்ப்புற நலவாழ்வு மையம் திட்டம் நிறைவு பெற்றாலும், அதனை நீட்டிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார், எனக் கூறினார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு அதிமுகவினரிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.