‘யார் புலி..? யார் நாய்..?-னு அப்போ தெரியும்..’ அண்ணாமலையின் குட்டி ஸ்டோரிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி..!!

Author: Babu Lakshmanan
24 July 2023, 2:47 pm

சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து அதை அரசியலாக்கி வாக்காக மாற்ற எண்ணுகின்ற பாஜக வின் கனவு நிச்சயமாக தகர்ந்து போகும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் பாலபள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட களப்பாறை – விருந்தோம்பி விளை – புளியற விளை இடையேயான பழுதடைந்த சாலையை சீரமைக்க மத்திய அரசின் நகர்புற திட்டத்தின் கீழ் ரூபாய் 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று அந்தப் பணியினை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- இந்தியா போன்ற பல ஜாதி, பல மொழி, பல இன, பல சமூகங்களை சார்ந்த மக்கள் வாழ்கின்ற நாட்டில் எல்லோரையும் உள்ளடக்கிய அரசியல் தான் வெற்றி பெறும்.

இன்றைக்கு அவர்கள் செய்கின்ற ஒரு பெரும்பான்மை மக்களுடைய உணர்வுகளை தூண்டி சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து, அதை அரசியலாக்கி, வாக்காக மாற்ற எண்ணுகின்ற பாஜகவின் கனவு நிச்சயமாக தகர்ந்து போகும்.

அப்போ தெரியும் அண்ணாமலைக்கு யார் புலி..? யார் நாய்..? என்பது தெரியும், எனவும் பதிலளித்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!