வெட்கமே இல்லாதவர் பிரதமர் மோடி… அதுக்கு இதுதான் எடுத்துக்காட்டு ; கடுமையாக விமர்சித்த திமுக அமைச்சர்..!!

Author: Babu Lakshmanan
19 March 2024, 10:06 pm

பிரதமர் மோடியை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் 2வது நாளாக சுற்றுப்பயணம் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கோவையில் ரோடு ஷோவில் பங்கேற்ற அவர், இன்று சேலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜிகே வசான், ஏசி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். மேடையில் பொன்னாடை போற்றிய ராமதாஸை பிரதமர் மோடி கட்டியணைத்து வரவேற்றார்.

தொடர்ந்து, மேடையில் பேசிய பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். தமிழகத்தில் எனக்கு கிடைத்து வரும் ஆதரவை நாடே ஆச்சரியத்துடன் பார்ப்பதாகவும், பாஜகவுக்கு பெருகும் ஆதரவு திமுகவின் தூக்கத்தை கெடுத்து விட்டதாகவும் கூறினார். திமுகவும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது என்றும், ஒரு பக்கம் ஊழல், ஒரு பக்கம் குடும்ப ஆட்சியை நடத்துவதாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் X தளத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- வெட்கமே இல்லாத ஒருவரால் தான் இப்படி பேச முடியும். மூப்பனார் மகன் வாசன், ராமதாஸ் மகன் அன்புமணி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், குமரி அனந்தன் மகள் தமிழிசை ஆகியோரை மேடையில் வைத்துக்கொண்டு வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று மோடி பேசுவது அவரின் அதீத நேர்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Dil Raju and Ram Charan collaboration கேம் சேஞ்சர் தோல்வி: ராம் சரணின் நெகிழ்ச்சி செயல்…மகிழ்ச்சியில் தில் ராஜு..!