பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சாது… ஆவினுக்கு இனி நான் பொறுப்பு ; அமைச்சர் மனோ தங்கராஜ்!!

Author: Babu Lakshmanan
10 June 2023, 5:01 pm
Quick Share

பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சாது என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கிய பின் செய்தியாளர்களை பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- தமிழக முதல்வரின் வழிகாட்டுதலில் ஆவினில் இனி நல்லதே நடக்கும். ஆவின் மீது திட்டமிட்ட தாக்குதல் நடைபெறுகிறது. தமிழகத்தின் சிறந்த துறையாக பால்வளத்துறை திகழும். அதற்கு நான் பொறுப்பு, என்றும் கூறினார்.

மேலும் அவர் பேசும் போது, இன்றைய காலகட்டத்தில் சாதாரண விஷயத்தை கூட ஊதி பெரிதாக காட்ட முடியும். ஆவின் மீதான குற்றச்சாட்டை மிக தீவிரமாக விசாரித்து அதன் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, நல்லவற்றை பாராட்ட வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் விஷயத்தில் ஒளிவு, மறைவு இருக்கக் கூடாது என்பதால் தான் அவர்களது ஊதியத்தை வங்கிக் கணக்கில் கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

எங்களது பணி தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது. பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சாது. அமுல் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம், என்றார்.

பேடியின் போது நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான மகேஷ், கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவர் குமரி ஸ்டீபன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

  • Suriya Beats Vijay and Rajini விஜய், ரஜினியை முந்திய கங்குவா.. இது லிஸ்டுலயே இல்லையே!
  • Views: - 396

    0

    0