மயிலாடுதுறை ; ஆலங்குடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பைப் பெற்றுத் தந்து அரசியலிலே அமைச்சராக பதவி உயர்வை பெறுவதற்க்கு காரணமாக இருந்தவர் முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் என்று கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சீர்காழி திருவெண்காட்டில் உள்ள அரசு பள்ளியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது ;- கடந்த 2016ம் ஆண்டு ஆலங்குடியில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பைப் பெற்றுத் தந்து அரசியலிலே அமைச்சராக பதவி உயர்வை பெறுவதற்க்கு காரணமாக இருந்தவர் முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின். இல்லையென்றால் என்னுடைய அரசியல் திசை மாறி சென்றிருக்கும்.
100 நாள் வேலை திட்டத்தில் நாட்கள் அதிகப்படுத்தப்படும். டெங்கு பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். திருவெண்காடு அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெருந்தோட்டம் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் உரிமைத்தொகை விடுபட்டவர்கள் மீண்டும் வார்டு உறுப்பினர்கள் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தெரிவித்தார்.
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
This website uses cookies.