‘எங்களுக்கு சோறு தான் முக்கியம்’… அமைச்சரின் பேச்சை தவிர்த்து பிரியாணிக்கு முண்டியடித்த திமுக தொண்டர்கள்..!!

Author: Babu Lakshmanan
7 August 2023, 4:27 pm

மதுரை ; பிரியாணிக்காக அமைச்சர் மூர்த்தி பேசும்போதே கூட்டத்தை புறக்கணித்து பிரியாணி சாப்பிட ஒடிய திமுக தொண்டர்களின் செயல் முகம் சுளிக்க வைத்தது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த திமுக பூத் ஏஜெண்ட் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில், அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்வது என மேடையில் அமைச்சர் பி.மூர்த்தி பேச ஆரம்பித்தார்.

அப்போது, பிரியாணி ரெடியாகியதால் அமைச்சர் மூர்த்தியின் பேச்சை கேட்காமல் கீழ்தளத்தில் பிரியாணிக்காக எழுந்து ஒடிய தொண்டர்களால் பரபரப்பு நிலவியது.

இதில், உச்சகட்டமாக ஒருவரை ஒருவர் போட்டி போட்டு கொண்டு பிரியாணிக்காக ஒடிய தொண்டர்கள் மட்டன் பிரியாணியை ஒரு பிடித்தவாறே, ‘அமைச்சர் பேச்சு முக்கியமில்லை… எங்களுக்கு பிரியாணி தான் முக்கியம்’, என்று அடித்து ஒடிய சம்பவம் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2024ம் ஆண்டு நடக்கப் போகும் தேர்தலில் பாஜகவை எப்படியாவது தோற்கடிக்க தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி வரும் நிலையில், பிரியாணிக்காக அமைச்சரின் பேச்சை புறக்கணித்த திமுக தொண்டர்களின் செயல் கட்சி தலைமைக்கு நிச்சயம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…