பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் ஒரு திட்டமிட்ட சதி… தமிழகத்தில் எங்கும் பால் தட்டுப்பாடில்லை : அமைச்சர் நாசர் கொடுத்த விளக்கம்… !
Author: Babu Lakshmanan17 March 2023, 1:54 pm
உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்படம் இன்று வெளியாவதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.
திருவள்ளுரில் உள்ள ராக்கி திரையரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்து இன்று வெளியாகும் கண்ணை நம்பாதே திரைப்படத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் தலைமை ரசிகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரன் தலைமையில் திரையங்க வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள், ஏழை எளியோருக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது :- தமிழகத்தில் எங்கேயும் பால் தட்டுப்பாடு ஏற்படவில்லை. தமிழகம் முழுவதும் 9356 சங்கங்கள் உள்ளன. இதில், ஒரு சங்கம் மட்டும் நேற்று வந்து கிரிவன்ஸ் நடைபெற்றது. இரண்டு மாதத்திற்கு முன்பு தான் மூன்று ரூபாய் உற்பத்தி விலை உயற்றினோம். மறுபடியும் பால் விலையை ஏற்ற வேண்டும் என்று கூறினார்கள். உங்களுடைய கோரிக்கை தமிழக முதல்வரிடம் சொல்லுவோம். அதன் பிறகு முடிவெடுப்போம் என்று கூறினோம்.
அந்த ஒரே ஒரு சங்கம் மட்டும் பாலை அனுப்ப மாட்டோம் என்று கூறினார்கள். ஆனால் ஏறக்குறைய வரவேண்டிய பால்கள் அனைத்தும் சரியான முறையில் ஒன்றியங்களில் இருந்து சீரான முறையில் வந்து கொண்டிருக்கிறது. 60 லட்சம் பாக்கெட்டுகள் ஒட்டுமொத்தம் தமிழக முழுவதும் சீராக முறையில் விநியோகிக்கப்பட்ட உள்ளது. உற்பத்தி செய்யும் இடத்திலும் தங்கு தடை இல்லை. விநியோகம் செய்யும் இடத்திலும் தங்கு தடை இல்லை. சரியான முறையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
அதிமுக தூண்டுதலின் பேரில் பாலை கீழே ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்திலிருந்து பால்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இங்கு தடை இல்லாமல் பால் உற்பத்தி நடைபெற்று வருகிறது, என்று பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, காக்களூர் பகுதியில் தமிழை வளர்க்க தமிழ் வாசிப்பதற்கு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் மற்றும் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள்.