பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த அமைச்சரின் உதவியாளர் : வீடியோ லீக்.!!
Author: Udayachandran RadhaKrishnan18 October 2024, 11:05 am
அரசு வீடு, ஓய்வூதியம் வழங்குவதாக கூறி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமைச்சரின் உதவியாளர் மீது புகார் எழுந்துள்ளது.
கடப்பா மாவட்டம் ராயச்சோட்டி தொகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் மாநில செயலாளர் காதர் பாஷா சமீபத்தில் நடந்த தேர்தலில் முதல்வர் சந்திரபாபுவின் சொந்த தொகுதியான சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பத்திலும் அக்கட்சியின் பார்வையாளராக பணியாற்றி தேர்தலின் போதும் பிரசாரம் செய்தார்.
தற்போது ராயச்சோட்டி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான ராம்பிரசாத் ரெட்டியின் முக்கிய உதவியாளராக உள்ள காதர் பாஷா அரசு வழங்கும் வீடு, ஓய்வூதியம் என அரசு தரப்பில் கிடைக்கும் நலத்திட்டங்கள் பெற்று தருவதாக கூறி பெண்களுக்கு பாலியியல் பலாத்காரம் செய்வதாக புகார் எழுந்ததது.
ஒரு பெண்னுடன் காதர் பாஷா நெருங்கி பழகும் வீடியோவுடன் செல்பி வீடியோ எடுத்து அதில் உருது மொழியில் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது ஆந்திராவில் வைரலாகி உள்ளது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு எவ்வாறு செயல்படுவார் என்பது அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.
இதையும் படியுங்க: ரஜினிக்கு என்ன ஆச்சு…? அவசர அவசரமா இணைந்து வாழ முடிவெடுக்கும் ஐஸ்வர்யா – தனுஷ்!
ஒரு மாதத்திற்கு முன், செப்டம்பரில், திருப்பதி மாவட்டம் சத்தியவேடு எம்எல்ஏ ஆதிமூலம் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால் அவரை தெலுங்கு தேசம் கட்சியில் நீக்கினார். பின்னர் இந்த வழக்கு நீதிமன்றம் வரை சென்று இருதரப்பில் பேசி சமாதானம் ஆனதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.