பிரதமர் மோடியை சந்தித்து உண்மையா..? வெளியான புகைப்படம்… அமைச்சர் பிடிஆர் கொடுத்த விளக்கம்…!!

Author: Babu Lakshmanan
5 March 2024, 2:37 pm

பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடியும் அடிக்கடி தமிழகம் வந்து செல்கிறார். கடந்த மாதம் பல்லடத்தில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவலுக்கு சென்று வழிபட்டார்.

பின்னர், மதுரையில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த பிரதமர் மோடியை சந்திக்க வருமாறு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ‘ஹைலி சீக்ரெட் மோஸ்ட் இம்பார்ட்டென்ட்’ என்ற தலைப்பில் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மறுநாள் காலையில் பிரதமர் மோடியை அமைச்சர் பிடிஆர் முதல் ஆளாக சென்று சந்தித்தார்.

இந்தத் தகவலையும், புகைப்படத்தையும் பாஜகவினர் சமூகவலைதளங்களில் வைரலாக்கி வந்தனர். இதனால், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவில் இணையப் போகிறாரா..? என்றெல்லாம் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. வருகிறது

இந்த தகவலை பாஜகவினர் சமூகவலைதளத்தில் பரப்பி வரும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது :- அரசியல் செய்யவதற்காக பிரதமர் மோடி தமிழம் வருகிறார். அரசியல் மட்டும் செய்யாமல் அரசாங்க ரீதியாக கவனம் செலுத்தி தேவைகளை, கோரிக்கைகளை நிறைவேற்றினால் நாங்கள் பாராட்டுவோம்.

பிரதமர் செல்லும் இடங்களில் மரியாதை செலுத்தவும், வரவேற்கவும், உதவி செய்வதற்கும், அவரது கான்வாயில் பயணம் செய்வதற்கும் வழி அனுப்பவதற்கும் அரசோடு பொறுப்பு. அந்த வகையில் என் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எனக்கு இந்த பணியை செய்ய கட்டளை வந்தது. அதை நிறைவேற்றினேன், எனக் கூறினார்.

மேலும், தென் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வந்த போது 4 முறை சந்தித்தேன். அவரை வரவேற்பதற்காக தமிழக அரசு எனக்கு 2 முறை ‘புரோட்டகால்’ கொடுத்தது. பிப்.,27 இரவு பிரதமர் அலுவலகம் விடுத்த சிறப்பு அழைப்பும் உண்மை. அப்போது மாநில அரசின் வழிகாட்டுதலையே பின்பற்றினேன். பிரதமரிடம் அரசியல் பேசவில்லை. நான் மரியாதையாக அவரை வரவேற்றேன். அதற்காக என்னை ‘தேங்க்யூ பாய்… என தட்டிக்கொடுத்தேன், எனக் கூறினார்.

  • SAWADEEKA song meaning அட”SAWADEEKA”அர்த்தம் இதுதானா…பங்கம் செய்துள்ள அனிருத்…செம VIBE-ல் அஜித் ரசிகர்கள்..!
  • Views: - 264

    0

    0