கருப்பு வேட்டி… கருப்பு துண்டு… சபரிமலையில் வழிபாடு செய்த அமைச்சர் PTR… இலாகா மாற்றத்திற்கு பிறகு முதல்முறை தரிசனம்..!!

Author: Babu Lakshmanan
18 May 2023, 10:03 pm

திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளை அண்மையில் நிறைவு செய்து விட்டது. இதையடுத்து, எடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார்.

மேலும், திமுக எம்பி டிஆர் பாலுவின் மகனும், கட்சி நிர்வாகியுமான டிஆர்பி ராஜாவை தொழில்துறை அமைச்சராக நியமனம் செய்தார். தொடர்ந்து, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோரின் துறைகளும் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த இலாகா மாற்றத்தால் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். கருப்பு வேஷ்டி, துண்டு மற்றும் வெள்ளை சட்டையுடன் செல்லும் அவருக்கு, கோவிலில் சிலர் தண்ணீர் கொடுத்து உபசரிக்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…