பேப்பரை நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்த அமைச்சர் பொன்முடி ஆவேசம்.. திமுக நிர்வாகிகள் சேர்க்கை நிகழ்ச்சியில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
8 April 2023, 11:09 am

விழுப்புரம் ; திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக நிர்வாகிகள் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பொன்முடி, படிவத்தை திமுக நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்து ஆவேசமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது திமுக தலைமை கழகத்தின் மூலமாக புதிய நிர்வாகிகளை பூத்கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும் என கூறி இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களே பூத்கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு படிவங்களை பூர்த்தி செய்து அமைச்சர் பொன் வீடு இடம் வழங்கிய வழங்கி உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி அந்த படிவத்தை தூக்கி அவர்களது முகத்திலேயே எரிந்து ஆவேசமாக பேசினார். இதனால் நிர்வாகிகள் இடையேயும், பொதுமக்கள் இடையேயும் பரபரப்பு நிலவியது.

மேலும் புதிதாக மீண்டும் படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என கூறிவிட்டு, திருக்கோவிலூர் மற்றும் அரகண்டநல்லூர் பகுதியில் நீர்மோர் பந்தலை திறந்துவிட்டு, அமைச்சர் பொன்முடி அங்கிருந்து சென்றார். இதனால் நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது.

https://player.vimeo.com/video/815803943?h=b67d0315d6&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…