ஆசிரியர்களை மாணவர்கள் அடிப்பாங்க.. அட்ஜஸ்ட் பண்ணித்தான் பாடம் எடுக்கனும் ; அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு… வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
31 May 2023, 12:48 pm

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்து அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அமைச்சர்களின் பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த நிகழ்வுகளால் நொந்து போன முதலமைச்சர் ஸ்டாலின், இதனை வெளிப்படையாகவே நிகழ்ச்சி ஒன்றில் கூறிவிட்டார்.

தினமும் தூங்கி எழுந்திருக்கும் போது, நமது கட்சியினர் இன்னைக்கு எந்த பிரச்சனையை பண்ணியிருக்காங்களோ..? என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதாக அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் இந்த வேதனையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போதே, மேடையில் இருந்த அமைச்சர் பொன்முடி, கலகலவென சிரித்தார்.

Ponmudi - Updatenews360

முதலமைச்சரின் இந்த நிலைக்கு காரணமானவர்களின் அவரும் ஒருவர். ‘பஸ்ல ஓசியில் பயணம்’, கிராம சபைக் கூட்டத்தில் பெண்ணை ஒருமையில் பேசியது, கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூறச் சென்ற போது, ‘எனக்கா ஓட்டுப் போட்ட’ என அடுத்தடுத்து கூறி சர்ச்சையை கிளப்பியவர் அமைச்சர் பொன்முடி.

அண்மையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கூட, ஒருமையில் பேசிய விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு, செய்தியாளரை போயா எனத் திட்டி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், மாணவர்கள் அடித்தால் அதனை அட்ஜெஸ்ட் செய்து கொண்டு பாடம் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அமைச்சர் பொன்முடி அட்வைஸ் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதனை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் பகிர்ந்து, கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…