செந்தில் பாலாஜியை தொடர்ந்து மற்றொரு அமைச்சருக்கு அமலாக்கத்துறை குறி… அதிகாலை முதல் சென்னை, விழுப்புரத்தில் அதிரடி சோதனை..!!

Author: Babu Lakshmanan
17 July 2023, 8:34 am

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருவதால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக உயர்கல்வித்துறையின் அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமாக இருப்பவர் பொன்முடி. சென்னைசைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிலும், விழுப்புரத்தில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனை குறித்த தகவல் அறிந்து வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிந்து வருவதால், சோதனை நடக்கும் இடங்களில் மத்திய பாதுகாப்பு படையின் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை, விழுப்புரம் என அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் அமலாக்கத்தூறை சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, கடந்த ஜுன் மாதம் 13ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில், திமுக அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்! 
  • Close menu