அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு புது நெருக்கடி… நடவடிக்கை எடுக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவு!

Author: Babu Lakshmanan
16 June 2022, 2:34 pm

பட்டியலின பிடிஓவை அவமதித்தது தொடர்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் பதவி உயர்வு வழங்க லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.

அவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, பட்டியலின பிரிவைச் சேர்ந்த பிடிஓவை, அமைச்சர் ராஜகண்ணப்பன் அவமதித்ததாக புகார் எழுந்தது. பட்டியலின பிடிஓவை அவமதித்து சாதி பாகுபாடு காட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி, புதிய தமிழகம் மற்றும் பறையர் பேரவையின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளருக்கு விடுத்துள்ள உத்தரவில், 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 685

    0

    0