பாதியில் வெளியேறிய ஆளுநர்… திடீரென அமைச்சர் கொடுத்த ரியாக்ஷன் ; வைரலாகும் வீடியோவால் சர்ச்சை!!

Author: Babu Lakshmanan
9 January 2023, 5:44 pm

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறிய போது அமைச்சர் பொன்முடி கொடுத்த ரியாக்ஷன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் உரை தொடங்கியதும், அதனை எதிர்த்து கூட்டணி கட்சிகள் கூச்சல் எழுப்பினர். அமளியில் ஈடுபட்டனர். பின்னர், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

இருப்பினும், தொடர்ந்து, உரையாற்றிய ஆளுநர் ஆர்என் ரவி, திராவிட மாடல், அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை தனது உரையில் தவிர்த்தார். இதனைக் கண்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் அவையில் இருந்து பாதியில் வெளியேறினார்.

இதனை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், தனது உரையை முடித்துக் கொண்டு, இருக்கையில் அமர்ந்தார். அப்போது, ஆளுநர் நடந்து செல்லும் போது, ‘வெளியே போ’ என்று சொல்வதைப் போல அமைச்சர் பொன்முடி ரியாக்ஷன் கொடுத்தது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே, ஓசி பயணம் உள்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அமைச்சர் பொன்முடி, தற்போது கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!