உலக நாடுகளில் திருமுருக வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை முருகர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
முருக பக்தர்களை உலகளவில் ஒருங்கிணைத்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு –பழனியில் வரும் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
மாநாடு நடைபெறும் மேன்மைத்தலம் பழனி,
முத்தமிழ்க் கடவுள் என்னும் முருகப் பெருமானின் மூன்றாவது படை வீடு திருவாவினன்குடி.
முருகனைக் கனவிலும் நனவிலும் கண்டு “அதிசயம் அநேகம் உற்ற பழனி மலை” என்று ஏத்துவதுடன் மிக அதிகமான பாடல்களைப் பழனிக்கு அருளியுள்ளார் அருணகிரிநாதர்.
நாடோறும் அருவமாக இருமுறை அருந்தமிழால் அகத்தியர் வழிபடுவதாகவும் அருளுகிறார் அருணகிரிநாதர்.
‘தமிழில் பாடல் கேட்டருள் பெருமாளே’ என்கிறது பழனித் திருப்புகழ்.
ஏகராகிய முருகப்பெருமானை போகர் கோயில் கட்டி தமிழில் வழிபட்ட இடம் பழனி மலை. அங்கு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது x தளப் பதிவில் இந்துக்கள் விரும்பும் கடவுளை வழிபட அனைத்து சுதந்திரமும் தமிழ்நாட்டில் உள்ளது”பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தலையிடாது””ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், அரோகரா என்றாலும் ஏற்றுக்கொள்வோம்””கோவிந்தா கோவிந்தா என்றாலும் ஏற்றுக்கொள்வோம், ஓம் முருகா என்றாலும் ஏற்றுக்கொள்வோம்””
முருகன் மாநாடு பொதுவானது- மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை வரவேற்கிறோம்””இதையே வரவேற்பாக ஏற்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாநாட்டில் பங்கேற்கலாம்””முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் மாநாட்டில் பங்கேற்பார்கள்””முதல்வர் பங்கேற்பது ஓரிரு நாளில் உறுதி செய்யப்படும் என பதிவிட்டுள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.