இந்துக்கள் குறித்து திமுக எம்பி ஆ.ராசா சர்ச்சை கருத்து.. பதில் சொல்ல மறுத்த அமைச்சர் சேகர்பாபு..!!

Author: Babu Lakshmanan
3 October 2022, 4:48 pm

எதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, அமைச்சர்களுக்கு வாய்கொழுப்பு என கூறினார் என தெரியவில்லை செல்லூர் ராஜிவிற்கு அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

வடசென்னை பேசின் பாலசாலையில் அமைந்துள்ள மண்டலம் 5ல் இன்று மழைநீர்வடிகால்வாய் பணிகளுக்கான ஆய்வு கூட்டமானது மாநகராட்சி அதிகரிகளோடு நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட இந்து சமய அறநிலைதுறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா, தற்போது நடைபெற்று வரும் பணிகளின் விவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதன் பின் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகிய இருவரும் கூறியதாவது ;- தற்போது உள்ள தமிழக அரசை போல் சுந்திரத்திற்கு முன்பும், பின்பும் கூட போர்கால அடிப்படையில் இவ்வளவு பணிகளை மேற்கொள்வது இதுவே முதல்முறை. 1200 கிலோ மீட்டர் அளவிற்கு மழைநீர் கட்டுமான பணி நடைபெறுகிறது, எனக் கூறினார்.

பின்னர், அமைச்சர் பொன்முடி குறித்த கருத்திற்கு தமிழக அமைச்சர்களுக்கு வாய்கொழுப்பு என விமர்சித்த செல்லூர் ராஜி எந்த அடிப்படையில் அதை கூறினார். விமர்சனத்திற்கு உண்டான விளக்கத்தை அந்த அமைச்சரே விளக்கம் கொடுத்த பிறகு அதை சர்ச்சையாக்குவது சரியாகாது. அதை தவிர்த்து ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது சாலசிறந்தது.

பின் , மனுஸ்மிருதி குறித்து ராஜா கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியை தவிர்க்கும் விதமாக, தொடர்ந்து மழைநீர் வடிகால்வாய் பணிகள் குறித்தே பேசினார்.

பின் மாநகராட்சி தெரு பெயர் பலகையில் சுவரொட்டி ஒட்டுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்ளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கும் செயல்கள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.

பின் சென்னையில் மழைநீர் வடிகால்வாய் பணிகளின் நிலவரம் குறித்து பேசிய மேயர் பிரியா ராஜன், 95% சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், மழைநீர் வடிகால்வாய்கான திட்டபணிகளுக்கான வரைவு சென்னை ஐஐடியிடம் ஆய்வின் படி நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?