கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க அனுமதிக்கவில்லை என்று அவரது வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ தெரிவித்துள்ளார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவரது தலைமை செயலகத்தின் அறையில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையை தொடர்ந்து, அவரது வீட்டின் முன்பாக துணை ராணுவப் படையினர், அதிவிரைவு படையினர் என அடுத்தடுத்து குவிக்கப்பட்டனர்.
சுமார் 17 மணிநேரம் நடந்த இந்த சோதனைக்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர். மேலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
நெஞ்சில் கைவைத்தபடி அவர் காரில் மருத்துவமனைக்கு அப்போதே அழைத்துச்செல்லப்பட்டார். இதையடுத்து, அவர் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படுவாரா, கைது நடவடிக்கையா என பரபரப்பு எழுந்தது. இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் முன்பு திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவரது வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ பேசியதாவது ;- அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. காரணம் எதுவும் சொல்லாமல் அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். உறவினர்கள், நண்பர்கள் யாரிடமும் அதிகாரிகள் எதுவும் சொல்லவில்லை.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. கைது நடவடிக்கை என்றால் அதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம், எனக் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இந்து முன்னணியில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும்,…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே காட்டுயானை தாக்கியதில்…
சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
This website uses cookies.