தானாகவே பதவியை இழக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி….? அதிகாலை 3 மணியளவில் நடந்த கைது சம்பவம் ; சட்டம் என்ன சொல்லுது…!!

Author: Babu Lakshmanan
14 June 2023, 7:39 am

அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரது அமைச்சர் பதவி தானாகவே இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவரது தலைமை செயலகத்தின் அறையில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையை தொடர்ந்து, அவரது வீட்டின் முன்பாக துணை ராணுவப் படையினர், அதிவிரைவு படையினர் என அடுத்தடுத்து குவிக்கப்பட்டனர்.

சுமார் 17 மணிநேரம் நடந்த இந்த சோதனைக்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர். மேலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

நெஞ்சில் கைவைத்தபடி அவர் காரில் மருத்துவமனைக்கு அப்போதே அழைத்துச்செல்லப்பட்டார். இதையடுத்து, அவர் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படுவாரா, கைது நடவடிக்கையா என பரபரப்பு எழுந்தது. இதற்கிடையே, அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு 3 மணியளவில் தெரிவித்தனர்.

இதனிடையே, ஒரு அமைச்சராக இருப்பவர் கைது செய்யப்படும் போது, அவர் அமைச்சர் என்ற தகுதியை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டால் அவரது துறையை வேறொருவருக்கு அவரேவும் மாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பான தகவல்கள், சட்டப்பேரவை செயலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அதை தொடர்ந்து சபாநாயகருக்கு தகவல் தெரியப்படுத்தப்படும், சட்டப்பேரவை நடைபெறும் பட்சத்தில், உடனடியாக அவையில் தெரிவிக்கப்படும். சட்டமன்ற கூட்டம் தற்போது நடைபெறாத நிலையில், 5 நாட்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 570

    0

    0