அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டில் ரெய்டு… வருமான வரித்துறையினர் அதிரடி…!!
Author: Babu Lakshmanan20 September 2023, 11:44 am
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தொழில் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத் துறைக்கு கான்வேயர் பெல்ட் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
வரி ஏய்ப்பு புகாரில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையானது, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, எண்ணூர், நாவலூர் உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசியின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் இன்று காலை வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற காசி, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் உதவியாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.