சென்னை ; தலைமறைவாக இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் விரைவில் சரணடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அதில், அவர் கொடுத்த வாக்குமூலத்தை பதிவு செய்யப்பட்டது. மேலும், அமலாக்கத்துறை காவல் முடிந்த பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 12ம் தேதி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, 4 முறை சம்மன் அனுப்பியும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகாமல், தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், அவரது மனைவிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் ஆஜராகாமல் இருந்து வருகிறார். மேலும், கரூரில் அவர்கள் கட்டி வரும் சொகுசு பங்களாவும் அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டது.
இந்த சூழலில், அசோக்குமாரை கொச்சியில் வைத்து அமலாக்கத்துறை கைது செய்ததாக சமூகவலைதளங்களில் செய்திகள் வைரலாகியது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், சம்மன் அனுப்பியும் அசோக்குமார் ஆஜராகவில்லை என்று கூறினர். அதேவேளையில், அசோக்குமார் மத்திய உளவு துறையின் பிடியில் இருப்பதாகவும் தகவல் வெளியானாலும், இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி விரைவில் அமலாக்கத்துறையில் சரண் அடைய திட்டமிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அவர் எப்போது சரண் அடைவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சரண் அடைந்த பிறகு அமலாக்கத்துறையினர் தனது பாணியில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…
ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…
கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…
சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம்…
உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
This website uses cookies.