அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டில் இரவிலும் தொடரும் சோதனை ; கரூரில் நீடிக்கும் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
13 June 2023, 9:20 pm

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீட்டில் இரவு நேரத்தில் தொடரும் அமலாக்கத்துறையினர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரரும், டெக்ஸ்டைல் ஏற்றுமதியாளருமான அசோக்குமார் வீடு, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள நிலையில் காலை முதல் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு நேரத்திலும், பலத்த ராணுவ பாதுகாப்பு துணையுடன் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

தற்பொழுது கரூரில் உள்ள ஜவஹர் பஜாரில் உள்ள பழனி முருகன் ஜூவல்லரி நகைக்கடை மற்றும் ஈரோடு சாலையில் உள்ள ராமவிலாஸ் உரிமையாளர் ரமேஷ்பாபு வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையானது இரவிலும் தொடர்ந்து வருகிறது.

கரூரில் தற்பொழுது வரை 8 இடங்களுக்கு மேல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி