அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 18வது முறையாக நீட்டிப்பு : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Author: Babu Lakshmanan
31 January 2024, 3:58 pm

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிப்ரவரி 7ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் 14ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, சிறையில் இருந்தவாறே ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஜனவரி 31ம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்றுடன் காவல் நிறைவடைந்த நிலையில், மீண்டும் காணொளி வாயிலாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிப்ரவரி 7ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம், 18வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 418

    0

    0