அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 17வது முறையாக காவல் நீட்டிப்பு.. சென்னை முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவு

Author: Babu Lakshmanan
29 January 2024, 2:56 pm

அமைச்சர் செந்தில் பாலாஜி பாலாஜியின் நீதிமன்ற காவலை 17வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் 14ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, சிறையில் இருந்தவாறே ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, செந்தில் பாலாஜி பாலாஜியின் நீதிமன்ற காவலை 17வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். அதாவது, ஜனவரி 31ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…