மீண்டும் நீதிமன்றத்தின் கதவை தட்டும் செந்தில் பாலாஜி தரப்பு… பயங்கர எதிர்பார்ப்பில் அமைச்சரின் ஆதரவாளர்கள்..!!

Author: Babu Lakshmanan
29 August 2023, 12:05 pm

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீனில் விடுவிக்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அதில், அவர் கொடுத்த வாக்குமூலத்தை பதிவு செய்யப்பட்டது.

மேலும், அமலாக்கத்துறை காவல் முடிந்த பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 12ம் தேதி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, நேற்று நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், அவரை மீண்டும் செப்டம்பர் 15ம் தேதி வரை காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!