டெல்லிக்கு சென்ற செந்தில் பாலாஜி விவகாரம்… அமலாக்கத்துறை காவலுக்கு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு..!!
Author: Babu Lakshmanan18 ஜூலை 2023, 11:37 காலை
அமலாக்கத்துறை காவலை அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை கைதை தொடர்ந்து அவருக்கு நீதிமன்ற காவலும் விதிக்கப்பட்டது. இந்த சமயத்தில், செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த 3வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன், நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பு சரியானது என்றும், அமலாக்கத்துறை கஸ்டடி எடுக்க முழு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்ச அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என மனுவில் வலியுறுத்தி உள்ளது.
இதனிடையே, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன செந்தில் பாலாஜி புழல் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை காவலை அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
0
0