மின்கட்டண உயர்வுக்கு போராட்டம் நடத்துபவர்கள் கேஸ் விலை உயர்வுக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா..? அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

Author: Babu Lakshmanan
22 July 2022, 8:36 pm

கோவை : மின்சார கட்டணம் உயர்வுக்கு போராட்டம் நடத்தும் கட்சிகள் (பாஜக, அதிமுக) கேஸ் விலை உயர்வுக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா?- அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் 6வது புத்தக திருவிழா கொடிசியா வளாகத்தில் இன்று முதல் துவங்கி 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து பார்வையிட்டார். சில புத்தகங்களையும் வாங்கினார். கொடிசியா வளாகத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் மொத்தம் 280 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும், இதில் பெரியார், கலைஞர், அப்துல் கலாம், திருவள்ளுவர் ஆகியோரின் சிலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:- தென்னிதிய புத்தக விற்பனையாளர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த புத்தக திருவிழா நடைபெறுகிறது என்றும், 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் வரும் 28ம் தேதி 5,000 மாணவர்கள் கலந்துகொண்டு திருக்குறள் வாசிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. 2,50,000 தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

250 பதிப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர் எனவும், பயனுள்ள நூல்கள் இங்கு காட்சி படுத்தபட்டுள்ளன என்றும், அரசு பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக மின்வாரிய மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும், கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக சீர்கேட்டால் தான் என கூறிய அவர், 1லட்சத்து 59 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் சுமை உயர்த்தபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, அவர் பேசியதாவது :- ஆண்டிற்கு 16,500 கோடி வட்டி செலுத்த கூடியளவிற்கு தமிழக மின்சார வாரியம் தள்ளப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கை மின்சார வாரியம் உற்பத்தி செய்தது. மூன்றில் இரண்டு பங்கு மின்சாரம் தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டது. மின் மிகை மாநிலம் என்று பொது மக்கள் மத்தியில் ஒரு தவறான பிரச்சாரம் முன் வைக்கப்பட்டது. மின் மிகை மாநிலம் என்றால் 4 லட்சம் விவசாயிகள் மின் இணைப்பிற்காக 21 ஆண்டுகள் காத்திருந்தனர்? அவர்களுக்கு இணைப்பு வழங்கி இருக்கலாம்.

2006 ஆண்டில் கலைஞர் ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட மின் திட்டங்கள் 10 ஆண்டுகள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் விரைவாக முடிக்க உத்தரவிட்டு வரக்கூடிய 5 ஆண்டுகளில் 6,220 மெகா வாட் கூடுதல் நிறுவு திறன் மின்வாரியத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலுவையில் இருந்த திட்டங்களுக்காக 12600 கோடி அளவிற்கு கூடுதலாக வட்டி மட்டும் கட்டபட்டுள்ளது. மின்சார உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள கட்சிகள் (அதிமுக பாஜக) மின்கட்டண அதிகம் உள்ள கர்நாடகா , குஜராத் மாநிலங்களில் ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.

மக்களுக்காக மின்சார உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் என அறிவித்துள்ள அரசியல் கட்சிகள், சமையல் சிலிண்டர், கியேஸ் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏன் கண்டிக்கவில்லை என கேள்வி கேட்க வேண்டும், எனக் கூறினார்.

தொடர்ந்து, மின்சார கட்டணம் குறித்து எஸ்.பி.வேலுமணி பேசிய கருத்திற்கு, பதில் அளித்த அவர் பேசியதாவது :- அதிமுக ஆட்சியில் 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சுமார் 37 விழுக்காடு மின்சார உயர்வை அதிமுக அரசு அறிவித்தது. 1.59 லட்சம் கோடி மின்துறை கடன் வைத்தது ஏன்? உதய் திட்டத்தில் அதிமுக அரசு ஏன் கையெழுத்திட்டது என எஸ்.பி.வேலுமணி பதில் சொல்லட்டும்.

இந்த மின்சார உயர்வால் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சமையல் கியாஸ் போல மொத்த பணத்தை பெற்று விட்டு, வங்கி கணக்கில் மானியம் வழங்கப்போவது இல்லை. மின்கட்டணத்திற்கான மானியத்தை கழித்துவிட்டு கட்டணம் செலுத்தினால் போதும். நாளை ஆர்ப்பாட்டம் நடத்தும் கட்சி (பா.ஜ.க கர்நாடாவிலும், குஜராதரதிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா..? 410 இருந்த விலை 1,100 ருபாய்க்கு விற்கும் நிலையில், பொதுமக்களுக்காக அதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா?

திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தும் (அதிமுக), எதனால் ஆண்டுக்கு ஆண்டு கடன் உயர்ந்தது என்பதை சொல்வார்களா? ஆர்ப்பாட்டம் நடத்தும் இரு கட்சிகளும் சின்னங்கள் வேறு வேறு என்றாலும் ஓரே இயக்கங்கள்தான். கடந்த ஆட்சியில் உதய்மின் திட்டத்தில் சேர்ந்தற்கான காரணத்தை அதிமுகவினர் சொல்வார்களா? யார் நிர்பந்தம் காரணமாக உதய் திட்டத்தில் சேர்ந்தார்கள் என்பதை விளக்குவார்களா..?

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கடன் கொடுக்கக் கூடாது என ரிசர்வ் வங்கிக்கே மத்திய அரசு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், திமுக தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது. மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கீடு வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்பட்ட பின்பு நடைமுறைப்படுத்தப்படும், என தெரிவித்தார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…