கோவை : அதிமுக ஆட்சியில் அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை விமானம் மூலம் கோவைக்கு வருகை தர உள்ளார். இந்த நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் திமுக செயற்குழு கூட்டம் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாளை கோவைக்கு வருகை தர உள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோவை விமான நிலையத்தில் பல ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிப்பது, அலுவல் மொழி மூலம் இந்தி திணிப்பை எதிர்த்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, 11ம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் புதியதாக 50,000 விவசாய மின் இணைப்புகளை முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்.
ஒன்னறை ஆண்டுகளில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகளை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மின்சாரத் துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- நாளை காலை 10 மணியளவில் முதலமைச்சர் கோவை விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசணை செய்யப்பட்டது. இதேபோல வருகின்ற 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த சிறப்பு முகாமில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் சிறப்பாக செய்வது குறித்து ஆலோசணை செய்யப்பட்டது, எனக் கூறினார்.
அப்போது, கோவையில் திமுக ஆட்சிக்காலத்தில் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை என்ற அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- 211 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலைகள் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போட வேண்டிய சாலைகள். கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள். இந்த சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் சில அலங்கார பணிகளுக்கு செலவு செய்யப்பட்டது. ஆனால் அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை.
முதலமைச்சர் மக்களின் அடிப்படை தேவை நிறைவேற்ற 200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். தற்போது 26 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. மீதமுள்ள பணிகள் மார்ச் மாதத்திற்குள் துவங்கும். இதேபோல நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் சாலை சீரமைக்கும் பணிகள் துவங்கும்.கோவை மக்கள் மற்றும் தொழில் துறையினரின் நீண்ட கால கோரிக்கையான விமான நிலைய விரிவாக்கப் பணிகள் 85 சதவீதம் நிறைவறைந்துள்ளது.
மீதமுள்ள பணிகளும் 2, 3 மாதங்களில் நிறைவு பெறும். பொத்தம் பொதுவாக அரசியல் கருத்து சொல்ல வேண்டும். இங்கு செய்யப்பட்டு பணிகளைப் பார்த்து அவர் கருத்து சொல்ல வேண்டும். கோவையில் நிலுவையில் உள்ள பாலங்கள் விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவிநாசி சாலை பாலப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. பால கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”கோவையில் திமுக அலுவலகம் கட்ட அவிநாசி சாலையில் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு வாங்கப்பட்டுள்ளது. அதன் டிசைன் ரெடியாகி வருகிறது. விரைவில் பூர்வங்க பணிகள் துவங்கும்” எனத் தெரிவித்தார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.