டிரான்ஸ்பார்மர் வாங்கியதில் ரூ.400 கோடி ஊழல்… செந்தில் பாலாஜிக்கு புது சிக்கல்… ஆதாரத்தை வெளியிட்டது அறப்போர் இயக்கம்..!!

Author: Babu Lakshmanan
6 July 2023, 4:45 pm

சென்னை ; மின்சாரதுறையில் சுமார் 400 கோடி ரூபாய் ஒப்பந்த முறைகேடு நடந்தது தொடர்பாக 288 பக்கங்கள் கொண்ட ஆதார அறிக்கையினை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் தமிழக மின்சார துறையில் அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2 வருடங்களாக துறையின் மூலம் செய்த ஊழல்களின் ஆதாரங்களை அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் பத்திரிக்கையாளர்கள் முன் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது :- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த இரண்டு வருடங்களாக 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் ஊழல் தொடர்பான துல்லியமான ஆதாரங்களை வெளியிடுகிறோம். ஓர் ஒப்பந்தத்தில் 30-40 நபர்கள் 10க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் ஒரே ஒப்பந்த விலையை சமர்பித்து, 40 நபர்களும் சமமாய் பிரித்து கொண்டு கூட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்ம் ஒப்பந்தத்திற்கு 800 கோடி ரூபாய்க்கு கொடுக்க வேண்டிய ஒப்பந்தத்திற்கு 1100 கோடி ரூபாய்க்கு வழங்கப்பட்டது. பலதரபட்ட ஆதாரங்களை சந்தை மதிப்பீட்டில் ஆராய்ந்து இந்த முடிவுகள் வெளியிடப்படுகிறது.
டெண்டர் குழுவில் இருக்கும் காசி டெண்டர் scrutinizing commiteeயில் இருக்கின்றனர். இந்த கூட்டு மோசடியை தடுக்காமல் அனைவரிடமும் ஒரே விலையை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

ராஜஸ்தானில் 7 லட்சத்து 87 ஆயிரம் ஒரு டிரான்ஸ்பார்மர் டெண்டர் விலையாக வெளியிட்டது. ஆனால், நம்முடைய அரசாங்கம் 12 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு டிரான்ஸ்பார்மர் வழங்கியுள்ளது. ஒரு டிரான்ஸ்பார்மரில் சுமார் 4 கோடி ரூபாய் மோசடி செய்யபட்டு உள்ளது. இந்த ஒரு ஒப்பந்தத்தில் 34 கோடி ரூபாய் நஷ்டம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 250 kva டிரான்ஸ்பார்மர் 7,29,600 ரூபாய் என அனைத்து ஒப்பந்ததாரர்கள் விலை சமர்ப்பித்துள்ளனர்.

ராஜஸ்தான், பஞ்சாப் என பல மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்துள்ளோம். அவை அனைத்தும் குறைவாக தான் உள்ளது. டிரான்ஸ்பார்மர் ஒப்பந்தத்தில் மொத்தமாக 397 கோடி ரூபாய் அமைச்சர் செந்தில் பாலாஜி காசியின் மூலம் ஊழல் செய்துள்ளார். இதை போன்ற மிக பெரிய ஊழல் சிறு அதிகாரிகள் செய்ய முடியாது.

மின்சாரத் துறை அதிகாரி காசி மின்சார துறை அலுவலகத்திற்கு செல்வதில்லை. காலை முதல் மாலை வரை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு சென்று பணி செய்கிறார். ஒரு அடிமட்ட வேளையில் பணிபுரியும் அதிகாரி அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்க்கு செல்ல காரணம் என்ன..?

அமைச்சரின் உறவினர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு கடந்த மாதம் 30ம் தேதி நடந்து கொண்டிருந்த போதும் மின்சார துறை அதிகாரி காசி அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்தார். காசி கடந்த ஆட்சியில் 2010 செப்டம்பரில் சஸ்பென்ட் பண்ணப்பட்டார். மார்ச் 2020 இல் காசிக்கு கட்டாய பணி ஓய்வு கொடுக்கப்பட்டது. ஆனால் 2021 ஜூனில் TANTRANSCO பொருளாதார மேலாளராக நியமிக்கப்பட்டார். பணி நீக்கம் செய்யப்பட்டவர் எப்படி நியமிக்கப்பட்டார்?.

அதேபோல் ராஜேஷ் லகானி மீதும் ஊழலில் மிக பெரிய பங்கு உள்ளது. அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, காசி, ராஜேஷ் லகாணி, செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 1 1/2 லட்சம் கோடி முன்பே கடனில் இருக்கும் தமிழகம், நஸ்டம் ஆன 397 கோடி ரூபாய் இருந்திருந்தால் எத்தனையோ நல்ல திட்டங்களை தொடங்க முடிந்திருக்கும்.

இவ்வாறு ஏற்பாடும் நஸ்டதை மக்கள் மீது தான் இறக்கி வைக்கிறது அரசு. 30 ஒப்பந்ததாரர்களுக்கும் அமைச்சருக்கும் நேரடியாக தொடர்பு குறித்தான ஆதாரங்கள் இல்லை. தமிழகத்தில் டிரான்ஸ்பா்மர் quotation அதிகமாகவும் மற்ற மாநிலங்களில் குறைவாகவும் இருக்கும். சோதனைக்கு பிறகு தான் இந்த ஊழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கு தெரியவரும்.

முதல் கட்டமாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது , தன்னிச்சையான விசாரணை அமைப்பு இந்த விவகாரத்திற்கு இல்லை என்ற காரணத்தினால் இங்கு புகார் வழங்கப்பட்டது , லஞ்ச ஒழிப்புத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் மேலும் நீதி மன்றத்தை நாட வேண்டும். இன்னும் சில விசயங்களில் வேலை செய்து கொண்டு இருக்கிறோம்.

எனவே, செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் தகுந்த தண்டனை மோசடி செய்தவர்கள் மீது எடுக்க வேண்டும். அதே முதலமைச்சர் ஸ்டாலின் மாநகராட்சியில் நடைபெற்ற ஊழலில் ஐஏஎஸ் கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!