சாரி, சொல்லிடுங்க… இல்லைனா வேற மாதிரி ஆயிடும் : அறப்போர் இயக்கத்திற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வைத்த கெடு..!!
Author: Babu Lakshmanan10 மார்ச் 2023, 4:04 மணி
அறப்போர் இயக்கம் பொய்யான குற்றச்சாட்டு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
நாளை (11ந் தேதி) கோவை கருமத்தம்பட்டியில் விசைத்தறியாளர்கள் நன்றி தெரிவித்து நடத்தும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்த விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தாவது :- தமிழக முதல்வர் அவர்களுக்கு விசைத்தறி நெசவாளர்கள் சார்பில் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில், பல ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அதற்கான விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்றார்.
மேலும், டாஸ்மாக் டெண்டர் விவகாரம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, டாஸ்மாக் டெண்டர் தொடர்பாக அறப்போர் இயக்கம் ஜெயராமன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அவர் மீது வழக்கறிஞர் மூலம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இடைத்தேர்தல் நடைபெற்றதால், ஈரோடு நீங்களாக, 43 குடோனில் இருந்து மொத்தம் 96 கோடி ரூபாய்கான டெண்டர் வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டது. அறப்போர் இயக்கத்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர் என்பது அபத்தமானது, அவர் திரும்பப்பெற வில்லை எனில், நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும், என கூறினார்.
0
0