தேர்தலுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி போட்ட வழக்கு : அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2023, 1:37 pm

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா காரணமாக அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதன்பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கழகத்தின் வேட்பாளர் கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த தேர்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து, செந்தில் பாலாஜி கடந்த மார்ச் மாதம் 2018ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் கடந்த 2ம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. அதில், கடந்த 2016ம் ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அரவக்குறிச்சி தேர்தல் வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?