தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் சேகர்பாபு. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.
இவரது மகள் ஜெயகல்யாணி கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சதீஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்கள்.. திருமணம் முடித்த கையோடு, பெங்களூரு சென்ற இந்த தம்பதியினர், அங்கிருந்த காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்..
அத்துடன், தன்னுடைய தந்தையிடம் இருந்து பாதுகாப்புக் கோரினார் ஜெயகல்யாணி. இது தொடர்பாக புகார் ஒன்றையும் தந்திருந்தார்.. அந்த புகாரில், பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி சதீஷ்குமாரை பல ஆண்டுகளாக காதலித்ததாக தெரிவித்திருந்தார்.
இதற்கு பிறகு, சில மாதங்களுக்கு முன்பு, வயிற்றில் குழந்தையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது கணவரின் தந்தை மாற்றுத்திறனாளியாக இருக்கும் நிலையில், அவரின் மீதும் வழக்குப்பதிவு செய்தார்கள். நாங்கள் நீதிமன்றம் சென்று வாதாடி வெற்றிபெற்றோம். நாங்கள் சென்னை வந்தால் உயிர்க்கு ஆபத்து.. அதனால், சென்னையில் கோர்ட்டுக்கு வரக்கூட பயமாக உள்ளது. என்னுடைய கணவரை கோர்ட்டில் சரணடைய வைத்தால் லாக்கப் டெத் செய்துவிடுவார்களோ என்று பயமாக உள்ளது. தமிழகத்தில் லாக்கப் டெத் அதிகரித்துவிட்டது.
ஒருவேளை எங்களுக்கோ, என்னுடைய குழந்தைக்கோ, கணவருக்கோ ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு, என் அப்பா அமைச்சர் சேகர்பாபு, காவலர்கள் ஜானி செல்லப்பா, கிருஷ்ணமூர்த்தி, தாய்மாமா யுவராஜ் ஆகியோர்களே முழு பொறுப்பு ஆவார்கள்.. நாங்கள் கோர்ட்டில் வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறோம். கடந்த 10 மாதத்தில் 3 போலி புகார்கள் என்னுடைய கணவரின் மீது பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் அப்பா, முதல்வருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் போலீசாரும் அவர்களுக்கே சாதகமாக இருக்கிறார்கள்” என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் பெண்ணை மிரட்டிய வழக்கில் அமைச்சர் சேகர்பாபு மருமகன் சதீஷை சென்னை புளியந்தோப்பு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2018 ஆண்டு புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் திருமணம் செய்து கொள்ளுவதாக கூறி ஏமாற்றியதாக சேகர்பாபு மருமகன் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார்.. இந்த புகாரின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சதீஷ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஓட்டேரி கொசப்பேட்டை எட்வர்ட் பார்க் பகுதியை சேர்ந்தவர் இந்த சதீஷ்குமார்.. 29 வயதாகிறது.. சதீஷ் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் ஏற்கனவே உள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு சதீஷ்குமார் அதேபகுதியை சேர்ந்த 23 வயது பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. அது தொடர்பான புகாரில், கடந்த 2018-ம் ஆண்டு, சதீஷை போலீசார் கைது செய்திருந்தனர்.. பிறகு, 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த சதீஷ், பிறகு முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்… இதனால் அல்லிக்குளம் நீதிமன்றம் சமீபத்தில் சதீஷ் குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்தநிலையில் பூந்தமல்லி செந்நீர்குப்பம் பகுதியில் தலைமறைவாக இருந்து வந்த சதீஷ்குமாரை இன்று புளியந்தோப்பு மகளிர் போலீஸார் கைது செய்தனர். அவரை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு உள்ளனர். சேகர்பாபுவின் மருமகன் கைதாகி உள்ள சம்பவம், இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.