குறைகளை கேட்க சென்ற அமைச்சர் சேகர்பாபு.. சுற்றி வளைத்த பொதுமக்கள் : சரமாரிக் கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2023, 4:47 pm

குறைகளை கேட்க சென்ற அமைச்சர் சேகர்பாபு.. சுற்றி வளைத்த பொதுமக்கள் : சரமாரிக் கேள்வி!!

கடந்த சில நாட்களாக, சென்னையில் பெய்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வண்ணாரப்பேட்டையில் மக்களிடம் குறைகளை கேட்க வந்த அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில், ஈடுபட்டனர். குடியிருப்புகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்றவில்லை என்றும், குடிநீர், மின்சாரம் இன்றி பல மணி நேரமாக தவிப்பதாகவும் கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ