கமலாலயத்துல இருக்க வேண்டியவரு,… ராஜ்பவனில் இருந்து சனாதன வகுப்பு எடுக்கறாரு : அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2023, 9:17 pm

ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ஆர் என் ரவி கூறிய பேட்டியில், தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை அறிந்தும் நான் எப்படி சட்டப்பேரவையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று கூற முடியும். நான் தமிழக மக்களுக்கு உண்மையை மட்டுமே உரைப்பேன் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறேன் அல்லவா?

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநர் மாளிகை நிதி பற்றி பொய்யுரைத்துவிட்டார். அவர் பெட்டி கிரான்ட்டில் விதிமீறல் என்று கூறினார். அந்த பதம் 2000ம் ஆண்டே நீக்கப்பட்டுவிட்டது. ஆளுநர் மாளிகை செலவினம் பட்ஜெட்டுக்கு உட்பட்டது. ஆனால் அதற்கென வரம்பு இல்லை என்றே நிதிக் கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆளுநரின் விருப்புரிமைக்கு கட்டுப்பாடில்லை. அதனால் பெட்டி கிரான்ட்டில் வரம்பு மீறல் என்பதே அப்பட்டமான பொய்” என்று ஆளுநர் ரவி பரபரப்பு காட்டி இருந்தார்.

இந்த நிலையில் ஆளுநரின் பேச்சுக்கு திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதாவது மதசார்பற்ற நாட்டில் பொறுப்புணர்வை மீறி ஆளுநர் ஆர்என் ரவி செயல்படுகிறார். அவர் தான் எடுத்த பதவிப்பிரமாணத்தை மீறி செயல்பட்டு வருகிறார்.

நிர்வாக விவகாரங்களை பொதுவெளியில் பேசி வருகிறார். அதோடு அடிப்படையற்ற கருத்துகளை பேசி வருகிறார். இந்த அடிப்படையற்ற கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்காவிட்டால் அது சரியான கருத்துகளாக புரிந்து கொள்ளப்படும். இதனால் தான் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஜனநாயக சக்திகளின் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் பணியை தவிர அனைத்து வேலைகளையும் ஆர்என் ரவி செய்கிறார். பொறுப்புள்ள பதவியில் இருப்பதை மறந்துவிட்டு ஆளுநர் பேச வேண்டாம்.

ஆர்என் ரவி ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை. பாஜக தலைவர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வந்தது போல் தெரிகிறது. ஆர்என் ரவி ஆளுநர் மாளிகையில் அமர்ந்து தமிழக பாஜக தலைவராக செயல்படுகிறார்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதவை பல மாதங்களாக கிடப்பில் போட்டார்.
இதன் மூலம் அவர் எத்தகைய மனிதர் என்பது தெரியவரும். திராவிடத்துக்கு தவறான பொருள் சொல்கிறார். திருக்குறளை திரிக்கிறார். சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார்.

மேலும் மாநில அரசு எழுதி அனுப்பியதை வாசிக்க விருப்பமில்லை என்றால் வேறு வேலையை பார்க்க வேண்டுமே தவிர அவை மாண்பை குறைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. ஆளுநர் பதவி என்பது மாநில அரசின் பிரதிபலிப்பே தவிர, தனிப்பட்ட அதிகாரம் கொண்ட பதவியல்ல; ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அதற்கான தன்மையுடன் நடக்க வேண்டுமே தவிர, தனி ஆவர்த்தனம் செய்யக்கூடாது என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 352

    0

    0