வெளிய உட்கார்ந்து கமெண்ட் அடிப்பது ஈஸி… கிரவுண்ட்-ல இறங்கி விளையாடும் போது தான் ; அமைச்சர் டிஆர்பி ராஜா பரபர பேட்டி..!!

Author: Babu Lakshmanan
11 May 2023, 3:56 pm

முதலமைச்சரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம் என்று தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் புதிய தொழில் துறை அமைச்சராக TRB ராஜா ஆளுநர் மாளிகையில் பதவி பிரமானம் ஏற்றுக் கொண்ட நிலையில், தலைமை செயலகத்தில் அவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் TRB ராஜா கூறியதாவது :- முதலமைச்சரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம். தற்போதைய தொழில்துறை அமைச்சரின் மகத்தான பணியை நல்ல முறையில் தொடருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. டெல்டாவின் பாதுகாவலனாக இருப்பேன் என முதலமைச்சர் ஆணித்தரமாக கூறியிருக்கிறார்.

டெல்டா சார்ந்த தொழில்கள் அமைய வேண்டும் என்ற முதலமைச்சரின் நீண்ட நாள் கனவு நிச்சயமாக நிறைவேறும் வகையில் பணியாற்றுவேன். இந்திய அளவில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக, அமைதி பூங்காவாக தமிழ்நாடு உள்ளது. முதலமைச்சருடான வெளிநாட்டு பயணத்திற்கு நானும் செல்கிறேன். தொழில் முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு தான் நம்பர் ஒன் இடம் என கூறும் வகையில் சவால்களை திறம்பட எதிர்கொள்வோம்.

கடும் பணி சுமைக்கு இடையிலேயும் முதலமைச்சரே நேரில் வந்து பார்வையிட்டு, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையையும் கம்போர்ட் ஸோனை கொடுத்துக் கொண்டிருக்கிறார். கிரவுண்ட்க்கு வெளியே உட்கார்ந்து நிறைய கமெண்ட் அடிக்கலாம். ஆனால் கிரவுண்ட்டில் இறங்கி விளையாடும் போது யோசித்து விளையாட வேண்டும்.

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்குவது தான் மிக முக்கியம். அதற்காகவே மாணவர்களுக்கான திறன் வளர் பயிற்சிகளை தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ப படிக்கும் போதே கொடுக்கும் திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார், என்றார்.

முன்னதாக அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட டிஆர்பி ராஜாவுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பூங்கொத்து மற்றும் புத்தகங்களை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ