அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சு.. வெறுப்பு வன்முறை : உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.. தமிழக அரசு ஷாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 நவம்பர் 2023, 2:17 மணி
Udhayanidhi - Updatenews360
Quick Share

அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சு.. வெறுப்பு வன்முறை : உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.. தமிழக அரசு ஷாக்!!

உதயநிதியின் சனாதன பேச்சுக்கு எதிராக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட பல பாஜக தலைவர்கள் கொந்தளித்தனர்.

உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதோடு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போலீஸ் நிலையங்களில் புகார்கள் செய்யப்பட்டன.

இதையடுத்து அவர் மீது வெளிமாநில போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுமட்டுமின்றி உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது.

இதுதவிர உதயநிதி ஸ்டாலின் மீது அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டுக்கு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உள்பட 262 பேர் கையெழுத்திட்டு கடிதம் எழுதியுள்ளனர்.

அதோடு சனாதன மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மதவெறுப்பு பேச்சுக்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பாட்டியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மனுவையும் விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு பற்றி புகாரளித்தாலும் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் அவரது செயல்பாடு மதவெறுப்புக்கு எதிரான பேச்சு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உள்ளது. எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதி மதவெறுப்பு பேச்சுக்கு எதிரான வழக்குகளுடன் விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், மதவெறுப்பு பேச்சு தொடர்பான மனுக்கள் தனித்தனியாக விசாரிக்கப்படும். சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாட வேண்டும் என வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

  • Beggar பிச்சைக்காரரிடம் கடன் வாங்கிய தொழிலதிபர்.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்!
  • Views: - 326

    0

    0