இந்த ரெய்டுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம்.. CM ஸ்டாலின் பெங்களூரூ போனதே பாஜகவுக்கு செக் வைக்கத்தான்… அமைச்சர் உதயநிதி ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
18 July 2023, 8:52 am

ED, CID, IT ரெய்டு லக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம் என்றும், அதிமுகவை போல எங்களை கைக்குள் வைக்க முடியாது என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது :- நாங்கள் பாஜக ஏவி விடும் ED, CID, IT உள்ளிட்ட சோதனைக்கு அஞ்சமாட்டோம். நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள். அதிமுகவை கைக்குள் வைத்தது போல திமுகவை வைக்க நினைக்கின்றனர்.

ஆனால் அது ஒரு போதும் நடக்காது. அமைச்சர் பொன்முடி வீட்டில் காலை முதல் சோதனை நடத்தி அச்சுறுத்தி பார்க்கின்றனர். ஆனால் அது நடக்காது. தலைவர் பெங்களூரு சென்று உள்ளது பாஜகவை தூக்கி எறியத்தான், என்று பேசினார்.

அதன் பின்னர் திமுக மூத்த முன்னோடிகளுக்கு 10000 ரூபாய் அடங்கிய பொற்கிலியை வழங்கினார்.

இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் நல்லதம்பி, வில்வநாதன், தேவராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, கதிர் ஆனந்த், மாவட்ட, ஒன்றிய, நகர ,பொறுப்பாளர்கள் என திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ