10 ஆண்டுகளில் தமிழகத்திற்கென ஒரு புல்லை கூட பிடுங்கி போடல… பாஜக குறித்து அமைச்சர் உதயநிதி பாய்ச்சல்!!

Author: Babu Lakshmanan
16 April 2024, 1:11 pm

அடுத்த இரண்டு நாட்கள் பாஜக அரசை ஓட ஓட விரட்டுவது குறித்து நீங்கள் பிரச்சாரம் செய்தால் திமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில் திமுக இளைஞரணித் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்காளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது :- கடந்த நாடளுமன்ற தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது போல, இந்த முறை மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

மேலும் படிக்க: ஓட்டுக்கு பணத்தை வாரி இறைக்கும் சிட்டிங் எம்பி… திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்க: அன்புமணி வலியுறுத்தல்

அடுத்த இரண்டு நாட்கள் பாஜக அரசை ஓட ஓட விரட்டுவது குறித்து நீங்கள் பிரச்சாரம் செய்தால் திமுக நிச்சயமாக வெற்றி பெறும். உதயசூரியன் சின்னத்திற்காக வாக்களித்த மற்றும் வாக்களிக்க தவறி மக்களுக்கு பெருமைப் படும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் வேலை செய்து வருகிறார்.

மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை, 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புறநகர் பேருந்து நிலையம், சோலார் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறிகள் சந்தை, பொல்லான் நினைவிடம் அமைக்க இடம் தேர்வு, அரச்சலூர் மலை கோவிலுக்கு செல்ல பாதை வசதி அமைக்க நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய கூட்டணி தேர்தல் அறிக்கையில் சிலிண்டர் 500ஆக விலை குறைப்பு, பெட்ரோல் 75 ரூபாயாக டீசல் 65 ரூபாயாக விலை குறைக்க நடவடிக்கை. ஆனால் மோடி சமையல் எரிவாயு விலை உயர்த்தி கொண்டே வருகிறார். சோலார் வணிக வளாகம், பாசூர் ரயில்வே மேம்பாலம், கொடுமுடியில் காவிரி ஆற்றில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து சென்று தான் முதல்வரானார். ஜெயலலிதா இறந்த பிறகு தவழ்ந்து தவழ்ந்து போய் சசிகலா காலை பிடித்து முதல்வராகினார். அடுத்த நிமிடம் சசிகலா காலை வாரி விட்டார். பாஜகவுடன் நான்கு வருடங்கள் கூட்டணியில் இருந்து விட்டு, தமிழ்நாட்டின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி ஆகிய உரிமையை எடப்பாடி பழனிசாமி விட்டு கொடுத்தார்.

மேலும் படிக்க: ’70 பேரை கூப்பிட்டு வந்தேன்.. 40 டோக்கன் தான் இருக்கு’..? திமுக கூட்டத்தில் நிர்வாகியிடம் பெண் வாக்குவாதம்..!!

கலைஞர் இருந்த போது நீட் தமிழகத்திற்கு வரவில்லை. தமிழ்நாடு இந்தியாவின் மெடிக்கல் ஹப்பாக இருந்தது. பிறகு ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு வரவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு பயந்து நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டு வந்து விட்டனர். இதுவரை 7ஆண்டுகளில் நீட் தேர்வால் 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலைமைகள் இருந்தது.

திமுக ஆட்சி வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்ய சட்ட ரீதியான போராட்டம் நடத்தப்பட்ட வருகிறது. நான்கு பேர் மட்டுமே பாரளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டார்கள். திமுக தலைவர் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை ஆகியவை குறைத்தார். பிஎம் மூலம் கொரோனா காலத்தில் பிரதமர் 32 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், இதுவரை கணக்கு காட்டவில்லை.

கொரோனா காலத்தில் நிதி வழங்கப்பட்டது, கட்டணமில்லா பேருந்து மூலம் மகளிர் மாதம் 850 ரூபாய் வரை சேமிப்பு செய்து வருகிறார்கள். 465 கோடி முறை பெண்கள் மகளிர் இலவச பேருந்து சேவை பயன்படுத்தி உள்ளனர். இதில் ஈரோடு மாவட்டத்தில் 21 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் 11 ஆயிரம் மாணவிகள் ஈரோடு மாவட்டத்தில் பயன்பெற்று வருகிறார்கள்.

முதலமைச்சர் காலை உணவு திட்டம் இந்தியாவில் வேறு இல்லாத சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது.1-5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். தெலுங்கானா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருப்பது தான் திராவிட மாடல் அரசு சாதனை. இதில் ஈரோடு மாவட்டத்தில் 56 ஆயிரம் மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகிறார்கள்.

கடும் நிதி நெருக்கடி போதும் கூட, மாதம் ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள் முதல் 1 கோடியே 18லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர் என்ற அடிப்படையில், விரைவில் விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும். இதில் ஈரோடு மாவட்டத்தில் 4 லட்சம் மகளிர் பயன்பெற்று வருகிறார்கள். 10 ஆண்டுகள் இந்திய நாட்டை ஆண்ட போது, தமிழகத்திற்கு என ஒரு புல்லை கூட போடவில்லை.

சென்னை தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது, 2500 கோடி ரூபாய் மாநில அரசு நிதி வழங்கியது. ஆனால், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. இதனால், பிரதமரை 29 பைசா என்று சொல்லி தான் அழைக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி வரி என்பது சரியான வழிப்பறி கொள்ளை. ஜிஎஸ்டி மூலம் சரியான கொள்ளை அடித்து வருகிறது ஒன்றிய அரசு.

ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் மத்திய அரசு, முறையாக சரிசமமாக மாநிலத்திற்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு சுயமரியாதை வேண்டும். ஆளுநர் பாஜகவின் கைபாவையாக உள்ளார். தேசிய கீதமும், தமிழ் தாய் வாழ்த்தும் முக்கியம் என்று சொன்ன தலைவர் நம் தலைவர் ஸ்டாலின்.

அண்ணா வைத்த தமிழ்நாடு பெயரை மாற்ற வேண்டும் என ஆளுநர் சொன்னவர். ஒன்றிய அரசு வழங்கும் 29 பைசாவை வைத்து கொண்டு இவ்வளவு நல்லது செய்யும் நிலையில், தேவையான நிதியை வழங்கும் ஆட்சி வந்தால், தமிழகத்திற்கு எப்படியெல்லாம் நலத்திட்டங்களை செய்யலாம் என்று நினைத்து பாருங்கள், எனக் கூறினார்.

பிரச்சாரத்தின் இறுதியில் பெண் ஒருவர், மருத்துவ காப்பீடு திட்டம் காலாவதியானதாக புகார் சொன்ன நிலையில், அந்த பெண் பெயர் செல்போன் எண் ஆகியவற்றை எழுதி கொடுக்க சொன்னார் உதயநிதி ஸ்டாலின்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறையாக ஊதியம் வழங்க வேண்டிய ஒன்றிய பாஜக அரசு, தமிழகத்திற்கு மட்டும் நிதி கொடுப்பதில்லை. அதற்காக தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 200 ரூபாய் ஊதியத்தை 400 ரூபாயாக உயர்த்தி வழங்கும் என்று சொல்லி உள்ளது. அதற்கு இந்திய கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். கடந்த தேர்தலில் அடிமை அதிமுகவை விரட்டி அடித்தது போல, இந்த முறை அதிமுக எஜமானர்கள் பாஜகவை விரட்டி அடிக்க வேண்டும், எனக் கூறினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!