பிரதமர் மோடி இன்னும் கொஞ்ச நாளைக்கு தான்… மதுரை பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி கிண்டல்…!!

Author: Babu Lakshmanan
25 March 2024, 8:21 am

மதுரை ; மதுரையில் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

மதுரை ஊமச்சிக்குளம் மற்றும் கோ.புதூர் பகுதிகளில் மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, பேசிய அவர், சு. வெங்கடேசன் பாராளுமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றியதால், மறுபடியும் அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வழங்கப்பட்டு உள்ளதாகவும், கடந்த 2019 தேர்தலில் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த அவரை, இந்த முறை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அதற்கு திமுக ஆட்சியின் சாதனைகளையும், மத்தியில் பிஜேபி ஆட்சியின் அவலங்களையும் ஒவ்வொருவரும் 10 பேர்க்காவது கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி, இன்னும் சிறிது நாட்களுக்குத்தான் பிரதமர் என தனது பேச்சில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டதோடு, கடந்த இரண்டு நாட்களாக அனைத்துப் பிரச்சார இடங்களிலும் ஒரே மாதிரி உரையைத்தான் தொடர்ந்து பேசி வருகிறார்.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!