‘இந்திய ஒன்றியத்துக்கே’ வழிகாட்டுவது நம் திராவிட மாடல் அரசு… அமைச்சர் உதயநிதி பெருமிதம்

Author: Babu Lakshmanan
11 February 2024, 7:14 pm

கோவையின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது X வலைதளத்தில், “தொலைநோக்குத் திட்டங்களை நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சீராக செயல்படுத்துவதில் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுவது நம் திராவிட மாடல் அரசு. அந்த வகையில், தமிழ்நாட்டின் மிகப்பெரும் தொழில் நகரமான கோவையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மாநகராட்சி எல்லைக்குள் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.780 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பில்லூர் – 3 குடிநீர் திட்டத்தை இன்று திறந்து வைத்தோம்.

மேலும், கோவை மாநகராட்சியின் புதிய மாஸ்டர் பிளான் தொடர்பாக இணையவழி கருத்து கேட்பிற்கான கியூ.ஆர். கோடு (QR Code) பயன்பாட்டை தொடங்கி வைத்தோம். அதைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் – தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் – பொதுப்பணித்துறை – வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் ரூ.639 கோடி மதிப்பீட்டில், நிறைவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து – நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்தினோம்.

அதைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் – தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் – பொதுப்பணித்துறை – வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் ரூ.639 கோடி மதிப்பீட்டில், நிறைவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து – நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்தினோம். கோவையின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினோம். எந்த சூழலிலும் மக்கள் நலனுக்கான திட்டங்களை கழக அரசு தொய்வின்றி செயல்படுத்தும் என உரையாற்றினோம், என்று அதில் பதிவிட்டுள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?