சென்னையில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா..? கிடைக்காதா? – அமைச்சர் உதயநிதி சொன்ன தகவல்

Author: Babu Lakshmanan
15 December 2023, 8:45 am

சென்னையில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு வெள்ள நிவாரணம் கிடைக்குமா..? என்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர் உள்பட 4 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் இலட்சக்கணக்கான மக்கள் உடமைகளை இழந்தனர்.

மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசு, சென்னையில் ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், சென்னையை அல்லாதவர்களும் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா..? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதனிடையே, சென்னை அண்ணாநகர், திருவல்லிக்கேணி பகுதியில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:- சென்னையில் ரேஷன் கார்டுகள் இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும், என்றார்.

தொடர்ந்து, எம்பிக்கள் ரத்து செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்ததாவது :- புகை குண்டு வீசியவர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதி கொடுத்தவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய எம்.பி மீது நடவடிக்கை எடுத்திருப்பது ஜனநாயக படுகொலை, என்று கூறினார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 305

    0

    0