‘நான் நம்புறேன்… உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..?’ சனாதனம் குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி பதில்…!!

Author: Babu Lakshmanan
20 September 2023, 8:45 am

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டில் புள்ளிவிவரம் எடுப்பது தொடர்பாக10 வருடமாக கோரிக்கை வைத்து வருவதாகவும், அதை எப்போது செய்யப் போகிறார்கள் என்று தெளிவு இல்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து அவரிடம் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில்,”அது கொண்டு வருவது போல் தெரியவில்லை. புள்ளிவிவரம் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 10 வருடமாக அந்தக் கோரிக்கை வைத்து வருகிறோம். அதை எப்போது செய்யப் போகிறார்கள் என்று தெளிவு இல்லை,” எனக் கூறினார்.

காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு :- சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேளுங்கள், எனக் கூறினார். விஸ்வகர்மா திட்டம் குறித்த கேள்விக்கு: அதை எதிர்த்து இருக்கிறோம், என்றார்.

தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக இருப்பதாக கவர்னர் கூறியது குறித்த கேள்விக்கு:- அதற்குத்தான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறோம். சாதிய வேறுபாடுகள் இருக்கக் கூடாது, என்றார்.

சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்து விடுமா என்ற கேள்விக்கு:- “நான் நம்புகிறேன்; நீங்கள் நம்பவில்லையா; நம்புங்கள்,” எனக் கூறினார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…