100 ஆண்டுகளாக பேசிட்டு இருக்கோம்… ஜெயக்குமார் தலையை சீவ முடியாது ; செய்கை மூலம் கிண்டல் செய்த அமைச்சர் உதயநிதி..!!

Author: Babu Lakshmanan
6 September 2023, 5:03 pm

இந்தியாவுக்கு பாரத் என்ற பெயர் வைத்தது எனக்கு தெரியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரையிலிருந்து விமான மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த போது :- பிரதமர் மோடி இன்று இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்ற பெயர் வைத்தது எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, பேசிய அவர், சனாதன தர்மத்தை ஒழிக்கவேண்டும் என்று கடந்த 100 ஆண்டுகளாக திமுக பேசி வருகிறது. இது திசை திருப்பும் நோக்கம் அல்ல. அதை திமுக அரசு நடைமுறைக்கு கொண்டும்பந்தும் உள்ளது அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் என்று நடைமுறை படுத்தியது யார்..? நாங்க தானே கொண்டு வந்தோம், எனக் கூறினார்.

அப்போது, செய்தியாளர் ஒருவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தது குறித்து எழுப்பிய கேள்விக்கு, ஜெயக்குமார் தலையில் முடி இல்லை, அவரால் சீப்பு வைத்து சீவ முடியாது, என்று செய்கையில் கிண்டல் செய்தார்.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!