சிறுபான்மையினர் ஆணையத் தலைவர், துணைத் தலைவர்; தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்; முதலமைச்சர் உத்தரவு

Author: Sudha
24 July 2024, 9:47 am

தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திட 1989-ஆம் ஆண்டு கலைஞர் அவர்களால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.

2010-ஆம் ஆண்டில் பிறப்புக்கப்பட்ட தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 2010 ன்படி சிறுபான்மையினர் ஆணையம் சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாகச் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர், மற்றும் உறுப்பினர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திற்கும் புதிய தலைவரை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சிறுபான்மையினர்ஆணையத்தின் தலைவராக அருட்தந்தை ஜோ அருண், மற்றும் துணைத் தலைவராக எம்.எம். அப்துல் குத்தூஸ் எனும் இறையன்பன் குத்தூஸ் ஆகியோரை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.

சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த தனிநபர் மற்றும் குழுக்களுக்கு உதவிடும் வகையில் குறைந்த வட்டி விகிதத்தில் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு கடனுதவித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்.

இது மேலும் சிறப்பாகச் செயல்படும் நோக்கில் அதன் தலைவராக C.பெர்னாண்டஸ் ரத்தின ராஜா நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  • Ajithkumar in GBU இன்னும் ஏழே நாள் தான்.. Good Bad Ugly செம அப்டேட்!
  • Views: - 262

    1

    0