வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சின்னராஜா குப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி விஷ்ணு பிரியா(16). கூலித் தொழிலாளியான இவரது தந்தை மது போதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாயிடம் சண்டை போடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
தந்தையின் போதை அடாவடியால் சிறுமி மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். முதலில் சிறுமி விஷ்ணுபிரியா தந்தையை திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையுடன், இனிமே குடிக்க வேண்டாம் என்று தந்தையிடம் பல முறை கெஞ்சிக் கேட்டிருக்கிறார்.
ஆனால், குழந்தையின் கண்ணீருக்குக் கூட மனம் கரையாத அளவுக்கு போதை அவரை அடிமையாக வைத்திருந்தது.
தந்தையின் குடிப்பழக்கம் காரணமாக வீட்டில் நடக்கும் பிரச்சினைகளைப் பார்த்துவந்த சிறுமி விஷ்ணுபிரியா, இறுதியில் வேறு வழி இல்லாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், சிறுமி தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்தவும். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஊரெல்லாம் சாராய கடையையும், பார்களையும் திரந்துவைத்து அவள் அப்பாவை மதுவிற்கு அடிமையாக்காமல் இருந்திருந்தால் டாக்டராக கூட ஆகியிருப்பாள் என ஷியாம் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அனிதா வயதுடைய மாணவி தான் விஷ்ணுபிரியாவும்… ஊரெல்லாம் சாராய கடையையும், பார்களையும் திறந்துவைத்து அவள் அப்பாவை மதுவிற்கு அடிமையாக்காமல் இருந்திருந்தால் டாக்டராக கூட ஆகியிருப்பாள். ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.