துரை தயாநிதி டிஸ்சார்ஜ்.. வீடியோ எடுக்க வந்த பத்திரிகையாளர்களை அடிக்க பாய்ந்த மு.க.அழகிரி! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2024, 2:17 pm

உடல் நலக்குறைவு காரணமாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல் நலம் தேறிய நிலையில் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து இன்று காலை 10.30 மணி அளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் இருந்து வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்கு உயர் ரக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு, சி.எம்.சி மருத்துவமனையின் “A” வார்டில் அவருக்கென்று தனி அறை ஒதுக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக தொடர் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் படிக்க: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பண்ணை வீட்டில் நுழைந்த மர்மநபர்கள்.. மதுரையில் அதிர்ச்சி..!!

சிகிச்சையில் நல்ல முன்னேற்றமடைந்த நிலையில், துரை தயாநிதி டிசார்ஜ் ஆகி சென்னை சென்றார். துரை தயாநிதி டிச்சார்ஜ் ஆவதை வீடியோ போட்டோ எடுக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது, அழகிரியின் உதவியாளர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.

அதோடு அழகிரியே பத்திரிக்கையாளர்களை தாக்க வந்தார். அதனை அடுத்து பத்திரிக்கையாளர் போன் கேமிராக்கள் பறித்தனர். இந்த நிலையில் பத்திரிக்கையாளர்கள் ஒன்று சேர்ந்த நிலையில் மீண்டும் கேமிரா போன் ஒப்படைக்கப்பட்டது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!