ஒரே ஜெயிலில் நானும் எம்எல்ஏவும் இருந்தோம்… பொதுமக்கள் மத்தியில் பெருமையாக பேசிய திமுக அமைச்சரால் சர்ச்சை!

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2023, 12:52 pm

ஒரே ஜெயிலுக்கு நானும் எம்எல்ஏவும் போனோம்… பொதுமக்கள் மத்தியில் பெருமையாக பேசிய திமுக அமைச்சரால் சர்ச்சை!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் ஓசூர் எம்ஜிஆர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் மற்றும் ஓசூர் பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டுமான பணிகள் ஆகியவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓசூர் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக அமைச்சர் கே என் நேரு, தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், இந்த மேடையில்தான் அதிக அளவு நான்கு வார்த்தை கூடுதலாக பேசியுள்ளார்.

சட்டமன்றத்தில் அவர் கனகச்சிதமாக இரண்டே வார்த்தையில் பேசி விடுவார். நீண்டகாலமாக எங்களோடு சட்டசபையில் உறுப்பினராக உள்ளார். நாங்க இரண்டு பேரும் ஒரே ஜெயிலுக்கு போனவங்க, அவருக்கு 9 வழக்குகள் எனக்கு 19 வழக்குகள் அவரோடு எனக்கு அதிகமான வழக்குகள் உள்ளது என பேசினார்.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!