அதிமுகவை நிர்வாகிக்கும் தகுதியும், திறமையும் இல்லாதவர் ஓ.பன்னீர்செல்வம் என்று திருப்பரங்குன்ற சட்டமன்ற அலுவலகத்தில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா இன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது :- அதிமுகவுக்கு வலிமையான தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். ஜீலை 11 ஆம் தேதி எடப்பாடி கே.பழனிச்சாமி பொது செயலாளராக அறிவிக்க உள்ளோம். ஒ.பி.எஸ் மீது நாங்கள் அன்பு கொண்டவர்கள். ஒ.பி.எஸ் தவறான முடிவு எடுக்கும்போது சுட்டி காட்ட கடமைப்பட்டுள்ளோம். 2021 சட்டமன்ற தேர்தலில் ஒ.பி.எஸ் பிரச்சாரம் செய்ய வரவில்லை.
ஒ.பி.எஸின் நெருங்கியவர்களுக்கு கூட பிரச்சாரம் செய்யவில்லை. ஒ.பி.எஸ் சுயநலத்துடன் செயல்பட்டு வருகிறார். ஒ.பி.எஸ் க்கு அதிமுகவில் எந்தவொரு செல்வாக்குமில்லை. தென் மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது.
ஒ.பி.எஸ் தென் மாவட்டங்களில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக ஒரு மாயை உருவாக்கி உள்ளார். திமுக ஆட்சியை வாழ்த்துபவர்கள், துதி பாடுபவர்கள் அதிமுகவிற்கு தலைமை ஏற்க கூடாது. ஓ.பி.எஸ். கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது தொகுதியை விட்டு எந்த தொகுதிக்கும் வாக்கு சேகரிக்கவில்லை.
ஒபிஎஸ்-க்கு எதிராக எந்த சதி வளையும் பின்னப்படவில்லை. அவரை எங்கும் அவமதிக்கவில்லை. 2021 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு ஒ.பி.எஸ்ஸும் ஒரு காரணம். தோல்வி ஏற்படும் என நினைத்து இருந்தால் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஒ.பி.எஸ் தடுத்து நிறுத்தி இருக்கலாமே.? பதவி நீக்கம் செய்வதற்கு முன் ஒ.பி.எஸ் பதவியை விட்டு கொடுத்து செல்ல வேண்டும். தலைமை நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஒ.பி.எஸ் அனுமதி தேவையில்லை.
அதிமுகவை நிர்வாகிக்கும் தகுதி, திறமை இல்லாதவர் ஓபிஎஸ். எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுகவின் பொதுச்செயலாளர், ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் ஒபிஎஸ், என கூறினார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.