கோவை ; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் பூத் கமிட்டிகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் கோவை அவினாசி சாலை சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கோவை மற்றும் சேலம் மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்குள் பூத் கமிட்டிகளை பலப்படுத்தி கட்சியின் கட்டமைப்பை வலுவாக்க வேண்டும் என கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். இது தொடர்பாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணி முடிவை எடுத்த கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாகவும், இக்கூட்டத்தில் விவாதித்துள்ளதாகவும் தெரிகிறது.
இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறினார். மீண்டும் கோவையில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நான் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு இருந்தாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், என்று கூறினார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…
டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
This website uses cookies.